Friday, 17 April 2009

Fwd: இந்த வாரம் "ஆனந்த விகடனில்" வந்த கவிதை


---------- Forwarded message ----------
From: Ram Kumar <mcarams007@gmail.com>
Date: 2009/4/17
Subject: இந்த வாரம் "ஆனந்த விகடனில்" வந்த கவிதை
To: d kesavan <successk7@gmail.com>


எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்திர்கள்
கலாச்சாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிக்கைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்கள் சம்பாத்யத்தின்
பெரும் பகுதியை வரிஎனப் புடுங்கினீர்கள்
நங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
"
இந்திய ஒளிர்கிறதுஎன
விளம்பரம் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானா சகோதரர்களே ?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்
"
கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?"
 
 
இந்த வாரம் "ஆனந்த விகடனில்" வந்த கவிதை - எழுதியவர் : செல்வேந்திரன்


No comments:

Post a Comment